பாரம்பரியமிக்க தூத்துக்குடி கருவாடு கடையின் சுவைமிகு கதை!

தூத்துக்குடி என்றாலே 1900 காலகட்டத்தில் கடலும் கடல் சார்ந்த தொழிழுமே முதன்மை தொழிலாக இருந்தது. பல ஊர்களுக்கும் தூத்துக்குடியில் இருந்து மீன்கள் கருவாடுகள் அனுப்பபட்டு வந்தன.தூத்துக்குடி மீன்கள் கருவாட்டுக்கு என அனைத்து ஊர்களிலும் தனி மதிப்பு அதன் சுவைகளினால் கிடைத்தது. மிக சிறிய அளவில் கருவாடு தயாரித்து பல ஊர்களுக்கும் இலங்கைக்கு தோனி மூலம் அனுப்பும் நிறுவனத்தை 1972 ஆம் ஆண்டு எங்களின் மூதாதையர்கள் துவங்கினார்கள்.தரத்தை முதலிடாக கொண்டு துவங்க பட்ட எங்கள் நிறுவனத்தில் ஆரம்ப கால ஊழியர்களாக எங்கள் குடும்பத்தினரே பணியாற்றினார்கள். கடுமையான உழைப்பும் கால மாற்றமும் 150 ஊழியர்களுடன் 20 ஏக்கர் நிலத்தில் கருவாடு களத்தில் செயல்படும் நிறுவனமாக மாற்றியது. மொத்த தயாரிப்பு மொத்த வியாபாரம் என்ற செயல்பட்ட வணிகத்தில் இலங்கைக்கு அதிகபடியாக அனுப்பும் நிலைக்கு வந்ததும் இலங்கையில் எங்கள் விற்பனை நிலையத்தை நிறுவினோம்.! நிறுவத்தை நடத்தும் பொறுப்பை வாரிசுகளுக்கு காலத்தின் ஒட்டத்தில் வாய்ப்பளித்து. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது, வெளிநாடுகளில் தொழில் பயிற்சி பெறுவது காலத்திற்கு ஏற்ற வகையில் வாடிக்கையாளர்களை சென்று அடையும் தொழில்நுட்பங்களை பயின்று இணையதளங்கள் மூலம் கருவாடு டெலிவரி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் கருவாட்டுக்கென உருவாக்க பட்ட முதல் இணையதளம் மற்றும் ஆண்ட்ராய்டு செயலி நமது நிறுவனத்தினுடயது என்பது குறிப்பிடதக்கது! தற்போது தேடு இணையதளங்களில் கருவாட்டுக்கென தேடுபவர்களில் முதல் தேர்வாக நமது இணையதளம் இருப்பது எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களுக்கு தந்த அங்கீகாரம்..!!
இணையத்தின் வழியே நமது தமிழ் பாரம்பரிய சுவையை அனைவருக்கும் அறிமுகபடுத்தும் எங்கள் பயணத்தில் நீங்களும் கைகோர்ப்பீர்கள் என நம்புகிறோம்..!!


என்றும் எங்கள் கடவுளான வாடிக்கையாளர்களுக்கு நன்றியுன் !!

தூத்துக்குடி கருவாடுகடை குழு!!



குறிப்பு
தூத்துக்குடி கருவாடு கடையின் பெயர் (Brand Name) இலச்சினை (Logo)மற்றும் எங்கள் இணையதள பக்கங்களில் பகிரபட்டுள்ள புகைபடங்கள் (photos) ,கட்டுரைகள் (blog contents) ஆகியன தூத்துக்குடி கருவாடு கடையின் நிர்வாகத்திற்கு உரிமையானவை, சொந்தமானவை,
அரசாங்க பதிவு பெற்ற அவற்றை நிர்வாக அனுமதியின்றி மற்றவர்கள் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றம்!